/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
/
மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
மருத்துவமனையில் வாலிபர் உயிரிழப்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : மார் 23, 2025 06:46 AM

கடலுார்: கடலுாரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் இறந்ததை தொடர்ந்து, தனியார் மருத்துவமனை முன் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் அடுத்த நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் மகேஸ்வரன்,36. இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலுார் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டவர், நேற்று இரவு இறந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன், திருப்பாதிரிப்புலியூர் சப்இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் புதுநகர் போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது. புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.