நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு விநாயகர் பேரரசர் அறக்கட்டளை சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பல்வேறு கிரா மங்கள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், திருநாரையூர் ஊராட்சிக்குட்பட்ட, 175 குடும்பங்களுக்கு, விநாயகர் பேரரசர் அறக்கட்டளை சார்பில், இயக்குனர் கனகராஜ் நிவாரண பொருட்கள் வழங்கினார். இணை இயக்குனர் நிதிஷ்குமார் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

