
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: வீடு இடிந்து படுகாயமடைந்த விவசாயிக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் தில்லைகோவிந்தன். விவசாயி. கடந்த வாரம் பெய்த மழையின்போது, இவரது வீடு இடிந்து விழுந்ததில், தில்லைகோவிந்தன் படுகாயமடைந்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், ஜெ., பேரவை ராஜேந்திரன் உடனிருந்தனர்.