ADDED : அக் 07, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வீட்டின் மீது மரம் விழுந்து பாதிக்கப்பட்டவருக்கு தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கட்டுக்கரையைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சகுந்தலா. இவரது கூரை வீட்டின் மீது மரம் விழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன் ஆறுதல் கூறி அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் சுதா சம்பத், நகர செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, ஒன்றிய அவை தலைவர் பாலு, செல்வராசு, பாண்டியன், ரமேஷ், சரவணக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.