/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனைவருக்கும் நிவாரணம்; தே.மு.தி.க., வலியுறுத்தல்
/
அனைவருக்கும் நிவாரணம்; தே.மு.தி.க., வலியுறுத்தல்
ADDED : டிச 10, 2024 05:58 AM

விருத்தாசலம்; மாவட்டத்தில், அனைவருக்கும் புயல் நிவாரண நிதி வழங்க, தே.மு.தி.க., சார்பில், ஆர்.டி.ஓ., விடம் மனு அளிக்கப்பட்டது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், கடலுார் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென, தே.மு.தி.க., மாவட்ட துணை செயலர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூதிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், நகர செயலர் ராஜ்குமார், தலைவர் சங்கர், பொருளாளர் கருணா, நகர துணை செயலர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலர்கள் செம்பை, ஜெயக்குமார், மாவட்ட துணை செயலர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

