/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்
/
வேப்பூரில் 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கல்
ADDED : டிச 18, 2024 07:18 AM
வேப்பூர் : வேப்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 175 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் மற்றும் கால்நடைகள் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுமென அரசு அறிவித்தது. அதில், மழையால் இடிந்த குடிசை வீட்டுக்கு ரூ. 8 ஆயிரம், ஓட்டு வீட்டுக்கு, ரூ. 6,500, இறந்த கால்நடைகளுக்கு தலா ரூ. 37 ஆயிரம், கன்றுக்கு ரூ. 20 ஆயிரம், ஆடுக்கு ரூ. 4 ஆயிரம், இறந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேப்பூர் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்தது. அதில், 103 குடிசை வீடுகளும், 51 ஓட்டு வீடுகள் இடிந்தன. 4 மாடுகள், 5 கன்றுகள், 11 ஆடுகள் இறந்தன. மேலும், மின்னல் தாக்கி ஒருவர் இறந்தார். அவர்களுக்கு, வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் உத்தரவின்படி, மழை பாதிப்பு நிவாரண உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.