/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் சேதமடைந்த கட்டடம் அகற்றம்
/
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் சேதமடைந்த கட்டடம் அகற்றம்
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் சேதமடைந்த கட்டடம் அகற்றம்
மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் சேதமடைந்த கட்டடம் அகற்றம்
ADDED : ஜன 08, 2024 05:57 AM

கடலுார்: கடலுார் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த கட்டத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடலுார் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடலுார் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில், பழைய கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்த கட்டடத்தில் அவ்வபோது சிமென்ட் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்தன.
இந்த கட்டடத்தை இடிக்க பள்ளி நிர்வாகம் சார்பில் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி பள்ளியில், தமிழக சட்டப்பேரவை அரசு மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, பாதுகாப்பற்ற பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.