/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
சிதம்பரம் அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மே 29, 2025 03:36 AM

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள பின்னத்துாரில் கோதண்டராமன் சாமி கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
சிதம்பரம் அடுத்துள்ள பின்னத்துாரில் அமைந்துள்ளது கோதண்டராமன் சாமி கோவில்.மற்றும் மாசிமக கட்டளை ,தில்லை கோதண்டராமன் கோவிலுக்கு சொந்தமான 28 ஏக்கர் விளை நிலங்களை அங்குள்ள 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்தது, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் சீனிவாசன், கோவில் நிலங்கள் தாசில்தார் ஆனந்த் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பரம்பரை அறங்காவலர் தவகுருபிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் நிலம், பொதுமக்கள் ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.