/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் ரயில் பாதையில் பழைய ஸ்லீப்பர்கள் அகற்றம்
/
விருத்தாசலம் ரயில் பாதையில் பழைய ஸ்லீப்பர்கள் அகற்றம்
விருத்தாசலம் ரயில் பாதையில் பழைய ஸ்லீப்பர்கள் அகற்றம்
விருத்தாசலம் ரயில் பாதையில் பழைய ஸ்லீப்பர்கள் அகற்றம்
ADDED : ஜன 29, 2025 11:15 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், திருச்சி மார்க்க ரயில்பாதையோரம் கிடந்த பழைய ஸ்லீப்பர் கட்டைகள், நவீன கிரேன் மூலம் அகற்றும் பணி நடந்தது.
சென்னை - திருச்சி மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், தேஜஸ், வந்தே பாரத் உட்பட 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. ரயில்கள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், ரயில் பாதையில் அவ்வப்போது பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது.
அதில், பழைய தண்டவாளங்கள், ஸ்லீப்பர் கட்டைகளை அகற்றிவிட்டு புதிதாக பொறுத்தப்படுகிறது. அப்போது, பழைய ஸ்லீப்பர் கட்டைகள் ஆங்காங்கே ரயில் பாதையோரம் குவித்து வைக்கப்படும். இவற்றை அப்புறப்படுத்தும் பணி நேற்று நடந்தது.
அதன்படி, விருத்தாசலம் - திருச்சி மார்க்க ரயில் பாதையோரம் கிடந்த பழைய தண்டவாள துண்டுகள், ஸ்லீப்பர் கட்டைகள் மீட்கப்பட்டன. இதற்காக, யூ.டி.வி., கார் எனப்படும் நவீன ரயில்வே கிரேன் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.

