ADDED : ஜூன் 06, 2026 05:06 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
விருத்தாசலம் கடைவீதியில் இருந்து பாலக்கரை வரை பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் நடைபாதையில் கடை வைத்திருந்தனர்.
இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதன் காரணமாக, நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமையில், நகரமைப்பு அலுவலர் செல்வம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிஷ்ணன், நகராட்சி பணியாளர்கள் நேற்று கடைவீதியில் இருந்து பாலக்கரை வரை இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
அப்போது, மீண்டும் நடைபாதையில் கடைகளை வைக்க கூடாது என நடைபாதை வியாபாரிகளை எச்சரித்தனர்.
