/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்
/
அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்
ADDED : நவ 02, 2024 07:48 AM

கடலுார்: கடலுார் மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை போலீசார் அகற்றினர்.
தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி கடலுார் மாநகரின் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பிரதான சாலைகள், சாலை வளைவுகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் சாலையின் இருபுறங்களை ஆக்கிரமித்து எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு வைத்து விடுகின்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் ஒதுங்கி செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கவனம் சிதறுவதால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதுகுறித்து கடலுார் புதுநகர் போலீசாருக்கு புகார்கள் சென்றது.
அதன்பேரில், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார், சாவடி பஸ் நிறுத்தம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

