/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்றில் முட்புதற்கள் அகற்றம்
/
வெள்ளாற்றில் முட்புதற்கள் அகற்றம்
ADDED : ஜன 04, 2025 06:14 AM

புவனகிரி; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், புவனகிரி அடுத்த ஆதவராகநல்லுார் வெள்ளாற்றுபகுதியில் மண்டியிருந்த கருவை முட்புதற்கள் அகற்றும் பணி நடந்தது.
புவனகிரி வெள்ளாற்று பகுதியில் கருவை முட்புதற்கள் மண்டியதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இவற்றை விரைந்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மூலம் ஆய்வு செய்தபின், முட்புதர்களை வெட்டி அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து, முட்புதற்கள் அகற்றும் பணி துவங்கியது. நேற்று ஆதிவராகநல்லுாரில் கருவை முட்புதற்கள் அகற்றும் பணியை ஊராட்சி தலைவர் ஜோதிநாகலிங்கம் துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் கலைவாணி தமிழ்வாணன், பாசன விவசாய சங்க தலைவர் சிவசரவணன் மற்றும் கிராம இளைஞர்கள் உடன் இருந்தனர்.

