/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்டவாளம், உயரழுத்த மின் கம்பிகள் விருதை ரயில் நிலையத்தில் சீரமைப்பு

ADDED : செப் 25, 2024 03:55 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாளம், உயரழுத்த மின் கம்பிகள் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்தது.
சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இங்கு பயணிகள் கோரிக்கையை ஏற்று, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாயில் அலங்கார முகப்பு, நவீன டிக்கெட் கவுண்டர், கார் பார்க்கிங், நடைமேடைகளில் மேற்கூரைகள், கூடுதல் கழிவறைகள், சிக்னல் அறைகள், பயணிகள் காத்திருப்பு கூடம், கூடுதல் இருக்கை வசதிகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ரயில் நிலைய வளாகத்தில் பழைய தண்டவாளங்களை அகற்றி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மேலும், நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்டில் தண்டவாள இணைப்புகள் சரிபார்க்கப்பட்டது. அதுபோல், ரயில்கள் செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை எமர்ஜென்சி ரயில் இன்ஜின் மீது நின்றபடி, சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.