/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
/
அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
ADDED : ஜன 27, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம், திட்டக்குடி பகுதி அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி, பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குணபாலன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாஸ்கரன், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ., கிருஷ்ணகுமார், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சற்குணாம்பிகை, திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் முரளிதரன், திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் அருள்வடிவழகன் ஆகியோர் தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினர்.

