/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 28, 2025 05:16 AM

கடலுார் :
ஜெயப்பிரியா பள்ளி
விருத்தாசலம், கோபாலபுரம், திருப்பயர், தொழுதூர்,  நெய்வேலி, திரிபுர நேணி உள்ளிட்ட ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் கல்விக் குழும தலைவர் ஜெய்சங்கர் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி இயக்குநர்  தினேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., சதீஷ்குமார் தேசிய கொடி ஏற்றினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்தியா, அன்பரசன், சுகாதார வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஹயக்ரீவர் மேல்நிலைப் பள்ளி
ஹயக்ரீவர் பப்ளிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.வி.ஆர்., கல்வியியில் கல்லுாரி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். விழாவில், பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் லெரு அலெக்சாண்டர் சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் காங்.,
குடியரசு தினத்தை முன்னிட்டு காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் புருகீஸ்பேட்டை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசிய கொடியை ஏற்றினார்.
ஓ.பி.சி., மாவட்ட தலைவர் ராம்ராஜ், சேவா தளம் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அன்பழகன், ராஜாராம், பாண்டுரங்கன், பெருமாள், ஏழுமலை, மகளிரணி வசந்த ராணி,  துணைத் தலைவர் இசைராணி பஞ்சவர்ணம், சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது, ஐ.என்.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சாமிநாதன் பங்கேற்றனர்.
மந்தாரக்குப்பம் பள்ளி
கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜஸ்ரீ பாக்கியராஜ், ஊராட்சி செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.
வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் தேசிய கொடியேற்றி,  மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

