/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
/
விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 25, 2024 11:08 PM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை ஊராட்சியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டுமென, இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை ஊராட்சியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பின்தங்கிய கிராம பகுதியான இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி, கலலுாரி மாணவர்கள் உள்ளனர். இவர்கள், கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் விளையாடி, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் பரிசு பெற்று வருகின்றனர்.
ஆனால், அவர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்ட மைதானம் இப்பகுதியில் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்களில் சிதம்பரம், கடலுார் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு சென்று விளையாடி வருகின்றனர்.
விளையாட இடம் இல்லாததால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே இப்பகுதி இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு, அரசு சார்பில் விளையாட்டு மைதானம் அமைத்துத்தர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குழந்தைகள் விளையாட சிறுவர் விளையாட்டு பூங்கா அமைத்து கொடுக்கவும் அரசு முன்வர வேண்டும் என, இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.