ADDED : மார் 18, 2025 04:50 AM
கடலுார் : ரங்கநாதபுரம் கிராம மக்கள் வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கலெக்டர் குறைக்கேட்புக் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் கிராம மக்கள் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில்;
குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரத்தில் நாங்கள் நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டிற்கு மின் இணைப்பு பெற்று, ஊராட்சியில் வீட்டு வரியும் கட்டி வருகிறோம்.
குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு பல முறை வருவாய்த்துறையில் விண்ணப்பித்தும், இது நாள் வரை பட்டா வழங்கவில்லை.
எனவே ரங்கநாதபுரம் கிராமத்தில் குடியிருப்பவர்கள் வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.