/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்புக்கான ஊக்கத் தொகை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை
/
கரும்புக்கான ஊக்கத் தொகை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை
கரும்புக்கான ஊக்கத் தொகை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை
கரும்புக்கான ஊக்கத் தொகை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை
ADDED : அக் 21, 2024 06:38 AM
நெல்லிக்குப்பம்: தமிழக அரசு கரும்புக்கு அறிவித்த ஊக்க தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கான விலையை அறிவிக்கும்.இது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொறுந்தும்.மாநில அரசு சூழ்நிலைக்கேற்ப கூடுதல் விலையை அறிவிக்கும்.
அதை தனியார் ஆலைகள் வழங்கி வந்தன.ஆனால் கடந்த 2013ம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு கூடுதல் விலை அறிவிக்க அதிகாரமில்லையென கூறி மத்திய அரசு விலையையோ அல்லது கரும்பு பிழிதிறனை கணக்கில் கொண்டு அதற்கு குறைவாகவோ வழங்கி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 2023-202ம் ஆண்டுக்கு மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு 3150 விலை அறிவித்தது. தனியார் ஆலைகள் 2919 மட்டுமே வழங்கின. மத்திய அரசு விலையை உறுதி அளிவித்த நிலையில், தமிழக அரசு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்க 245 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த ஊக்க தொகையை தீபாவளி பண்டிகைக்குள் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

