/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு நரியன்வாயக்காலில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
/
நடுவீரப்பட்டு நரியன்வாயக்காலில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
நடுவீரப்பட்டு நரியன்வாயக்காலில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
நடுவீரப்பட்டு நரியன்வாயக்காலில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
ADDED : நவ 02, 2024 06:26 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன்வாய்க்காலில் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையில் நரியன் வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்கால் பத்திரக்கோட்டையிலிந்து நரியன்குப்பம்,நடுவீரப்பட்டு வழியாக கெடிலம் ஆறு வரை 3,500 மீட்டர் உள்ளது. சி.என்.பாளையத்திலிருந்து நடுவீரப்பட்டுக்கு இந்த வாய்க்கால் வழியாக தான் பொதுமக்கள் நடந்து சென்றனர். இந்த வாய்க்காலில் அதிகளவு சீமைகருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும் மழைகாலத்தில் மழைநீர் ஓட வழியில்லாமல் தேங்கி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கடந்த ஜனவரி மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கடந்த பிப்ரவரி மாதம் வாய்க்காலில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் கொடுத்துள்ளார்.
ஆனால் 8 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த நரியன் வாய்க்கால் தற்போது முழுவதும் சீமைகருவேல மரத்தினால் மூடப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து நரியன்வாய்க்காலை முழுமையாக அளவீடு செய்து,ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமைகருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.

