/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
/
திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
திருவந்திபுரம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 06, 2025 10:32 PM
கடலுார்; திருவந்திபுரம் கெடிலம் ஆற்று பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சிகரம் மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு:
கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்று பாலம் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கி காயம் மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.