/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
/
கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
ADDED : டிச 28, 2024 05:39 AM
புவனகிரி: கீரப்பாளையம் மற்றும் புவனகிரி ஒன்றிய பகுதிகளில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கீரப்பாளையம் மற்றும் புவனகிரி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் கால்நடை விவசாயிகள் பெருமளவில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். தற்போது பெய்த மழையில் கால்நடைகளுக்கு மர்ம நோய் தாக்கி வருகிறது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுவருகிறது.   எனவே, கால்நடை துறையினர் சிறப்பு முகாம் நடத்தி தேவையான சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இரு ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் கால்நடை மருத்துவமனை பெரும்பாலான நேரங்களில் பூட்டி கிடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.என அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

