/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தட்டானோடை - பெரியநற்குணம் இடையே தார்சாலை அமைக்க கோரிக்கை
/
தட்டானோடை - பெரியநற்குணம் இடையே தார்சாலை அமைக்க கோரிக்கை
தட்டானோடை - பெரியநற்குணம் இடையே தார்சாலை அமைக்க கோரிக்கை
தட்டானோடை - பெரியநற்குணம் இடையே தார்சாலை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 10, 2024 05:57 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தட்டானோடை காலனியிலிருந்து 3 கிலோ மீட்டர் துாரம் உள்ள பெரியநற்குணம் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் புதிய தார்சாலை அமைக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
காலணி மக்கள் மற்றும் கிராமத்திற்கென இரண்டு சுடுகாடுகள் இந்த சாலையில் உள்ளதால் இந்த சாலை வழியாக பிரேதத்தை எடுத்துச் செல்ல சிரமம் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லி, செம்மண் கிராவல் மட்டுமே கொண்டு சாலை போட்டுள்ளனர்.
தற்போது சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மழை காலங்களில் சாலை யில் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர்.
அருகில் உள்ள முகந்தரியங்குப்பம், அகரஆலம்பாடி, பு.ஆதனுார் பகுதி மாணவர்கள் தர்மநல்லுார் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு தர்மநல்லுார் ஏரிக்கரை பனஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையும் ஜல்லிகள் பெயர்ந்து மோசமாக உள்ளது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் விருத்தாசலம், சேத்தியாத்தோப்பிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். தர்மநல்லுார் பனஞ்சாலையையும், தட்டானோடை பெரிநற்குணம் இணைப்பு சாலையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நேரில் சென்று மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
எனவே பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என தட்டானோடை கிராமத்தைச் சேர்ந்தமுன்னாள் தி.மு.க., கிளை கழக செயலாளர் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.