/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை
/
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : டிச 30, 2025 05:18 AM
புவனகிரி: புவனகிரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கலெக்டருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்க தலை வர் குணசேகரன் அனுப்பிய மனு:
புவனகிரி சட்டசபை தொகுதி, தாலுகா, ஒன்றியம் மற்றும் பேரூராட்சியின் தலைமையிடமாக உள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சிதம்பரம் வழியாக வட மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இதனால் புவனகிரி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
புவனகிரி பகுதியில் சாலையின் இருபக்கமும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும், கால்நடை சுற்றித்திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.

