ADDED : ஆக 14, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : அரசு பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி பாடங்களை நடத்த உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் பல பள்ளிகளில் உடற்கல்வி பாடங்களை எடுக்க வகுப்புகள் ஒதுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.எனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், உடற்கல்வி பாடங்களை எடுப்பதற்கு வகுப்புகளை ஒதுக்கித்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.