/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் தொகுப்பில் முந்திரி இணைத்து வழங்க கோரிக்கை
/
பொங்கல் தொகுப்பில் முந்திரி இணைத்து வழங்க கோரிக்கை
பொங்கல் தொகுப்பில் முந்திரி இணைத்து வழங்க கோரிக்கை
பொங்கல் தொகுப்பில் முந்திரி இணைத்து வழங்க கோரிக்கை
ADDED : ஜன 06, 2025 06:37 AM

பண்ருட்டி : தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில், முந்திரி சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடலுார் மாவட்டத்தில் 35 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் முந்திரி பயிரிட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பல்லாயிரம் விவசாயிகள் முந்திரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
பண்ருட்டி சுற்று வட்டாரத்தில் முந்திரி பதப்படுத்தும் தொழிலில் 2 லட்சம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி பருப்பு சேர்த்து வழங்க வேண்டுகிறோம். இதனால், முந்திரி உற்பத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க அரசுக்கு தேவையான முந்திரி பருப்புகளை தரமான நிறுவனங்களுடன் இணைந்து அரசுக்கு வழங்க தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தயராக உள்ளது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.