/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை
/
புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை
புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை
புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : மே 22, 2025 11:33 PM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மந்தாரக்குப்பம்-நெய்வேலி டவுன்ஷிப் சாலை, வடக்குவெள்ளுர் ஊராட்சிக்குட்பட்ட , வேப்பங்குறிச்சி சாலை அருகே மந்தாரக்குப்பம் புதிய பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள நான்குமுனை சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து அதிகரித்து, இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.
இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் வரிசையில் வாகனங்கள் அணிவகித்து நிற்க வேண்டியுள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரண்டாம் சுரங்கத்திற்கு செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பஸ் ஸ்டாண்டு அருகில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.