/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதார் சேவை மையம் கூடுதலாக திறக்க கோரிக்கை
/
ஆதார் சேவை மையம் கூடுதலாக திறக்க கோரிக்கை
ADDED : நவ 27, 2025 04:43 AM
புவனகிரி: புவனகிரியில் ஆதார் சேவை மையங்களை கூடுதலாக திறக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆதார் பயன்பாடு நடைமுறையில் உள்ளதுடன், குழந்தையிலிருந்து, முதியோர் வரை அனைவருடைய பெயரிலும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார் எண் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் புதுப்பிக்க ஆயத்தமாகியுள்ளனர். புவனகிரியில் தாலுகா அலுவலகம் மற்றும் அஞ்சல் நிலையத்தில் மட்டும் சேவையை துவங்கியுள்ளனர். அஞ்சல் நிலையத்தை பொறுத்தவரை முதல்நாள் நேரில் வந்து டோக்கன் பெற்றுக் கொண்டு அவர்கள் அழைக்கும் தினத்தில் உரிய ஆவணங்களுடன் வந்து தங்கள் சேவையை துவங்குகின்றனர். இதனால் இரு தினங்களை இழக்கும் நிலை நீடிக்கிறது. பொதுமக்கள் மாணவர்கள் நலன் கருதி, தாலுகா தலைமையிடமான புவனகிரியில் கூடுதல் சேவை மையங்களை துவங்கிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

