/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க கோரிக்கை
/
விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்க கோரிக்கை
ADDED : ஜன 12, 2025 10:28 PM
சிதம்பரம்; பொங்கல் விடுமுறை நாளில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை அழைப்பதை கைவிட வேண்டும் என பல்கலைகழக பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நலன் காக்கும் மாமன்ற தலைவர் வேல்ராமலிங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடத்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்காக 13 முதல் 19 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆருத்ரா தரிசனத்திற்கு மாவட்ட விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால், தற்போது விடைத்தாள் திருத்தும் பணியில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழாவை, குடும்பத்துடன் மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் வேளையில், அரசு மற்றும் ஆட்சியர் உத்தரவை மதிக்காமல், விடுமுறை நாளில், செமஸ்டர் விடைத்தாள் திருத்தம் செய்ய அலுவலர்கள், ஆசிரியர்களை அழைத்துள்ளது மிகவும் வருந்தத்தக்க செயல்.
ஆகவே 13 முதல் 19 வரைதேர்வுத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என வேல்ராமலிங்கம், பல்கலைகழக பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.