/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாசன வாய்க்காலில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

ADDED : செப் 01, 2025 06:23 AM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் செப்டிக் டேங்க் கழிவுகளை நீர் நிலைகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் கொட்டுவதைத் தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணிகளை ஒரு சிலர் செய்து வருகின்றனர். இவர்களில் செப்டிக் டேங்க் கழிவுகளை வெளியேற்றும் நபர்கள் சிலர், ஸ்ரீமுஷ்ணம் கள்ளிப்பாடி சாலையில் உள்ள குன்னத்தேரி பாசன கிளை வாய்க்காலில் வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் வாய்க்காலில் உள்ள நீர் மாசுபட்டு சுற்றுப்புறம் முழுதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகள், விலங்குகளை நோய் தாக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே, ஸ்ரீமுஷ்ணம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் செப்டிக் டேங்க் கழிவுகள் பாதுகாப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லாத இடங்களுக்கு கொண்டு சென்று வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.