/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு தொகை வழங்க மா.கம்யூ., கோரிக்கை
/
பயிர் காப்பீடு தொகை வழங்க மா.கம்யூ., கோரிக்கை
ADDED : அக் 29, 2024 06:39 AM
காட்டுமன்னார்கோவில்: விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடன் வழங்க வேண்டும் என அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் மா.கம்யூ., கட்சியின், 24வது மாநாடு எச்.எஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினர். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் வட்ட செயலாளர் தேன்மொழி, நிர்வாகிகள் இளங்கோவன், சிங்காரவேலு, பொன்னம்பலம், மணிகண்டன், வெற்றிவீரன், ரேணுகா, தினேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆதனுார்-மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை பாலத்தை திறக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு 2023-24ம் ஆண்டுக்கான பயிர் இன்ஸ்சூரன்ஸ் தொகை உடன் வழங்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் ஏழை மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

