ADDED : செப் 05, 2025 03:15 AM
பெண்ணாடம்:காரையூரில் சாலையோரம் உள்ள பட்டு போன ஆலமரத்தை விபத்து நடக்கும் முன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் - பெ.பூவனுார் சாலையில் காரையூர் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு பள்ளி அருகே பழமை வாய்ந்த ஆலமரம் கடந்தாண்டு பட்டு போனது.
ஆனால் இதுவரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற முன் வரவில்லை. காற்று வீசும்போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுவதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி சிறுவர்கள் அச்சம் அடைகின்றனர்.
விரைவில், மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பட்டுபோன மரம் வேரோடு சாய்ந்து விழவும் வாய்ப்புள்ளதால் மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள், பள்ளி சிறுவர்கள் நலன்கருதி, காரையூரில் அரசு பள்ளி அருகே பட்டுபோன ஆலமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.