/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
சேத்தியாத்தோப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
சேத்தியாத்தோப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
சேத்தியாத்தோப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : நவ 21, 2024 05:52 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு -விருத்தாசலம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் நலசங்க தலைவர் சிட்டிபாபு, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
சேத்தியாத்தோப்பில் இருந்து, பெரியகுப்பம், சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், அகரஆலம்பாடி வழியாக விருத்தாசலம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஒருவழி பாதையாக மாறி வாகனங்கள், கரும்பு லோடு டிராக்டர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையில் பல நாட்களாக வடியாமல் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அவசர தேவைகளுக்கு செல்லும், ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியவில்லை, மாடுகளை சாலையில் கட்டி ஆக்கிரமிப்பதால் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும். இல்லையெனில், வரும் 25ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

