/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
/
வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 09, 2025 01:03 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை, சீமை கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வெள்ளாற்றிலிருந்து நேரடியாக பாசனத்திற்கு ஏ.டி.சி., மதகில் தண்ணீர் திறந்து அனுப்பும் ராஜன் வாய்க்கால் உள்ளது. வெள்ளாறு ஏ.டி.சி., மதகு முகப்பில் துவங்கி பின்னலுார் வாலாஜா ஏரி முகப்பு வரை வெள்ளாறுராஜன் வாய்க்கால் 3 கி.மீ., துாரம் உள்ளது.
வெள்ளாறு ராஜன் வாய்க்கால் துார்வாரி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாவதால் ஆகாயத் தாமரை, சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்நது புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் தடையின்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, பாசனத்திற்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓரிரு மாதங்களில் வடகி ழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தா மரை, முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.