/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளத்தில் சம்புகளை அகற்ற கோரிக்கை
/
குளத்தில் சம்புகளை அகற்ற கோரிக்கை
ADDED : மே 30, 2025 05:48 AM

சேத்தியாத்தோப்பு,:சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி கிராமத்தில் குளத்தில் உள்ள சம்புகளை அகற்ற வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி ஒன்றியம், ஆணைவாரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மேலாண்மை திட்டத்தில் கடந்த 2019-20ம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணியில் சம்பு, புதர்களை அகற்றினர். ஐந்தாண்டுகள் கடந்துள்ள நிலையில் குளம் முழுவதும் சம்புகளும், ஆகாயத்தாமரைகளும் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
ஆகாயத்தாமரை அதிகளவில் படர்ந்து குளத்தின் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் உள்ள கழிவு நீரை குளத்தில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளத்தில் இருந்து வெளியேறும் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் சம்புகள் அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.