/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
/
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 21, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த மாந்தோப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர்தேக்கத் தொட்டியில் விரிசல்கள் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. மேலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் நீட்டி, இடிந்து விடும் நிலையில் உள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

