/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரியில் குப்பைகள் : தண்ணீர் மாசுபடும் அபாயம்
/
வீராணம் ஏரியில் குப்பைகள் : தண்ணீர் மாசுபடும் அபாயம்
வீராணம் ஏரியில் குப்பைகள் : தண்ணீர் மாசுபடும் அபாயம்
வீராணம் ஏரியில் குப்பைகள் : தண்ணீர் மாசுபடும் அபாயம்
UPDATED : நவ 21, 2025 07:50 AM
ADDED : நவ 21, 2025 05:33 AM

சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரிக்குள் குவிக்கப்படும் குப்பைகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இங்கிருந்து, வினாடிக்கு, 73 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏரியின் மூலம், மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய தாலுகா பகுதிகள் சம்பா பருவத்தில் பாசனம் பெறுகின்றனர்.
மக்களின் வாழ்வாதாரமாக உள்ள வீராணம் ஏரியில் பூதங்குடியில் துவங்கி லால்பேட்டை வரை மொத்தம் 28 மதகுகள் உள்ளன.
வீராணம் ஏரியில் பரிபூரணநத்தம், வெய்யலுார் சாவடி, வாழைக்கொல்லை வரை மாட்டு சாணங்களை ஏரியில் கொட்டி குவித்து வைக்கின்றனர். கழிவுகளை ஏரிக்குள் தொடர்ந்து கொட்டி வருவதால் தண்ணீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது.ஏரிக்கரையில் அமர்ந்து குடிக்கும் குடிமகன்களும் காலி மது பாட்டில்களை ஏரிக்குள் வீசுகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

