/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை மீண்டும் இயக்க கோரிக்கை

ADDED : டிச 01, 2025 05:58 AM
நடுவீரப்பட்டு: பண்ருட்டி-ராமாபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பண்ருட்டியிலிருந்து சாத்திப்பட்டு, சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு வழியாக ராமாபுரத்திற்கு அரசு பஸ், தடம் எண்: 24 இயக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் சாத்திப்பட்டு அருகே சாலையில், இந்த பஸ் விபத்தில் சிக்கியது. அன்று முதல் இந்த பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பஸ்சில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமத்தினை சேர்ந்த மாணவர்கள் பண்ருட்டியில் உள்ள பள்ளி,கல்லுாரிக்கு சென்று படித்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிட பண்ருட்டிக்கு சென்று வருகின்றனர். இந்த பஸ் மாணவர்களுக்கு சரியான நேரத்திற்கு சென்று வர உதவியாக இருந்தது. தற்போது நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் பாலுார் சென்று, பண்ருட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.