/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.முட்லுார் வழியாக வடலுாருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
/
சி.முட்லுார் வழியாக வடலுாருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
சி.முட்லுார் வழியாக வடலுாருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
சி.முட்லுார் வழியாக வடலுாருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை
ADDED : நவ 29, 2024 04:41 AM
புவனகிரி: சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக வடலுாருக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை கல்லுாரி மாணவர்கள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சி.முட்லுார் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து புவனகிரி சமூக ஆர்வலர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் சார்பில், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரத்தில் இயங்கிய கோர்ட் தற்போது புறவழிச்சாலையான சி.முட்லுார் அரசு கல்லுாரி அருகில் மாற்றப்பட்டுள்ளது. சிதம்பரம் புறவழிச்சாலையில் பஸ்கள் இயக்கப்படாததால் தினசரி கோர்ட், கல்லுாரி மாணவர்கள் மேலும் ஆர்.டி.ஓ., வணிக வரித்துறை அலுவலகத்திற்கு செல்பவர்கள் போக்குவரத்திற்கு கடும் அவதியடைகின்றனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, சிதம்பரத்தில் இருந்து புவனகிரி, குறிஞ்சிப்பாடி வழியாக வடலுாருக்கு தினசரி இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை, சிதம்பரத்தில் இருந்து மண்டபம், சி.முட்லுார், பி.முட்லுார் ஆதிவராகநல்லுார், தம்பிக்குநல்லான்பட்டினம், புவனகிரி வழியாக குறிஞ்சிப்பாடி மற்றும் வடலுார் பகுதிக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.