/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோர்ட் உத்தரவுபடி அறங்காவல் குழு தலைவரை தேர்வு செய்ய கோரிக்கை
/
கோர்ட் உத்தரவுபடி அறங்காவல் குழு தலைவரை தேர்வு செய்ய கோரிக்கை
கோர்ட் உத்தரவுபடி அறங்காவல் குழு தலைவரை தேர்வு செய்ய கோரிக்கை
கோர்ட் உத்தரவுபடி அறங்காவல் குழு தலைவரை தேர்வு செய்ய கோரிக்கை
ADDED : நவ 23, 2024 05:49 AM
புவனகிரி : ஐகோர்ட் உத்தரவுபடி புவனகிரி சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அறங்காவல்குழு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறங்காவல் குழு நிர்வாகி பழனி விடுத்துள்ள அறிக்கை:
புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை தேவாங்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாகித்து வருகிறோம். கோவிலை அரசுடமையாக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
விசாரணைக்குப் பின் தனியார் கோவில் என்பதால் நாட்டாண்மையை நீக்கி விட்டு அறங்காவல் குழு தலைவரை நியமித்து கண்காணிக்க கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் அறங்காவல் குழுவினர்களை நியமிக்காமல் காலம் கடத்தி வந்தனர். பின், நாட்டாண்மை அல்லாத ஒரு குழுவினர் மீண்டும், அலுவலர்களை சந்தித்து வைத்த கோரிக்கையின் பேரில், கடலுார் இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடந்த 2022 ஏப்., 23ம் தேதி அறநிலைத்துறைக்கான விண்ணப்பங்கள் கோரினர்.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் கடந்த 2023 பிப்., 4ம் தேதி புவனகிரி தேவாங்கர் சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, அன்பு, பழனி ஆகிய எங்கள் மூன்று பேரை அறங்காவலர்களாக நியமித்து, இதில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய அறிவித்தனர்.
ஆனால் அதற்கான தேர்வை நடத்தாமல் காலம் கடத்தினர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்த ஆக., 19ம் தேதி தலைவர் தேர்தல் நடத்தப்படும் என, அறநிலையத்துறை அறிவித்தது. இதுவரை தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர்.
எனவே, ஐகோர்ட் தீர்ப்பினை கவனத்தில் கொண்டு சாமூண்டிஸ்வரி அம்மன் கோவிலுக்கு அறங்காவல் குழு தலைவர் தேர்வை விரைந்து நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

