UPDATED : அக் 28, 2026 05:12 PM
ADDED : அக் 28, 2026 05:07 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: அலமேல்மங்காபுரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க, இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த அலமேல்மங்காபுரத்தில் 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மாலை நேரங்கள், விடுமுறை நாட்களில் விளையாட முடியாதநிலை உள்ளது. இதனால் அவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இப்பகுதி இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு, அலமேல்மங்காபுரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
