/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சார்பதிவாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
சார்பதிவாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
சார்பதிவாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
சார்பதிவாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 19, 2024 05:57 AM
பெண்ணாடம்: விபத்துகளை தடுக்க பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் வழியாக பஸ், லாரி, கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. பெண்ணாடம், சார்பதிவாளர் அலுவலகம் பகுதியில் வேளாண் விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.
இங்கு வரும் பொது மக்கள் விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையை கடந்துதான் அரசு அலுவலங்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடக்க முயலும் பொது மக்கள், சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லும் நோயாளிகள் வாகனங்களில் சிக்கி, படுகாயம் அடைவதுடன், உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பொது மக்கள் நலன்கருதி, பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகம் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

