/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ேஷர் ஆட்டோ இயக்க அனுமதி எஸ்.பி.,யிடம் கோரிக்கை
/
ேஷர் ஆட்டோ இயக்க அனுமதி எஸ்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : ஏப் 11, 2025 05:54 AM
கடலுார்: கடலுார் நேதாஜி சாலை ஒரு வழிப்பாதையில் ேஷர் ஆட்டோக்களை இயக்க அனுமதியளிக்க வேண்டும் என டிரைவர்கள் எஸ்.பி.,யிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
கடலுார் நேதாஜி சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததையடுத்து போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றினர். அதனால் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் இந்த சாலையில் வடக்கு நோக்கி செல்வதில்லை.
அதே நேரம் சற்று துாரம் சுற்றிக்கொண்டு மீண்டும் அருகில் உள்ள சாலை வழியாக நேதாஜி சாலையில் இணைகின்றனர்.
இந்த குறுகிய துாரத்திற்காக வெகுதுாரம் சுற்ற வேண்டியுள்ளது என கருதி ேஷர் ஆட்டோ டிரைவர்கள் கடலுார் எஸ்.பி.,யை சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர்.
அதற்கு எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், 'ேஷர் ஆட்டோ, ஆட்டோக்கள், கார் ஆகியவை இந்த சாலையில் போக்குவரத்திற்கு அனுதித்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இவ்வளவு ேஷர் ஆட்டோ, ஆட்டோக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக கலெக்டர், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இது தொடர்பாக அவர்களிடம் மனு கொடுங்கள். போக்குவரத்து விதிமீறல் ஏற்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.
அதைத்தொடர்ந்து ேஷர் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.