/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : ஜன 09, 2025 12:34 AM
கடலுார்; கடலுாரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென, பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுாரில் எஸ்.பி., ஜெயக்குமாரை மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரமேஷ், லெனின், மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, தனியார் பஸ் தொழிலாளர் நலச் சங்கம் தலைவா் குருராமலிங்கம் சந்தித்தனர். அப்போது, கடலுார் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, நேதாஜி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பார்க்கிங் இடம் கண்டறிந்து அமல்படுத்த வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.