/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணிக்கூண்டுகளை பாதுகாக்க கலெக்டருக்கு கோரிக்கை
/
மணிக்கூண்டுகளை பாதுகாக்க கலெக்டருக்கு கோரிக்கை
ADDED : மார் 12, 2024 05:39 AM
கடலுார், : கடலுாரில் உள்ள பழமையான மணிக்கூண்டுகளை பாதுகாக்க, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடலுார் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுத்துள்ள மனு;
கடலுார் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் உள்ள மணி கூண்டை (பழைய தண்ணீர் தொட்டி) அகற்றுவது குறித்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஞ்சக்குப்பம், சுப்புராயலு பூங்கா, கடலுார் பஸ் நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் உள்ள மணிக் கூண்டுகள் பழமையான கட்டட கலைக்கு வரலாற்று சான்றாக அமைந்துள்ளது. இந்த மணிக்கூண்டுகளை செப்பணிட்டு கடிகாரம் பொருத்தி இயக்கி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

