/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர் காவல் படைக்கு மீட்பு பணி செயல்விளக்கம்
/
மாணவர் காவல் படைக்கு மீட்பு பணி செயல்விளக்கம்
ADDED : நவ 09, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : அரசு பள்ளி மாணவர் காவல் படையினருக்கு, வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கடலுார் தீயணைப்பு நிலையத்திற்கு, கிழக்கு ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் காவல் படை மாணவ, மாணவியர் நேற்று கள ஆய்விற்கு வந்தனர். அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் கருவிகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, நிலைய உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் மாணவர்களை வரவேற்று, விளக்கமளித்தனர்.
மேலும், வடகிழக்கு பருவமழையின்போது, நீர்நிலைகளில் சிக்கியுள்ளவர்களை மிதவை பொருட்களை கொண்டு எப்படி மீட்பது என செயல்விளக்கம் அளித்தனர்.