ADDED : டிச 13, 2025 06:26 AM

புவனகிரி: சம்பா நடவு மற்றும் விதை நேர்த்தி வயல்களில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
மேல்புவனகிரி வட்டாரத்தில், விவசாயிகள் தற்போது சம்பா நடவு மற்றும் நேரடி விதைநேர்த்தி செய்துள்ளனர்.
மேலும், வேளாண்துறை மூலம், தெற்குத்திட்டை, ஆதிவராகநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் கோ.56,. சி.ஆர்.1009 சப்., 1, ஏ.டி.டீ., 1 ஆகிய நெல் ரகங்கள், விவசாயிகள் வயலில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வயல்கள் மற்றும் சம்பா நடவு வயல்களில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் லட்சுமிகாந்தன் ஆய்வு செய்தார்.
அப்போது விவசாயிகளிடம் விதைப்பண்ணை அமைத்து வேளாண்மை விரிவாக்க மைய, அலுவலகத்தில் விதை நெல் வழங்கும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிலோவிற்கு 8 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து சம்பா நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பல்வேறு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின் போது மேல்புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார், உதவி விதை அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

