/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2025 08:07 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறப்பு தலைவர் மருதவாணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணன் வரவேற்றார். பொதுச்செயலாளர் வெங்கடேசன் விளக்க உரையாற்றினார்.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் துவக்க உரையாற்றினார். ரங்கநாதன், வெங்கட்ரமணி, பாஸ்கர், கலைச்செல்வி வாழ்த்திப் பேசினர்.
இதில், கடலுார் சட்டசபை தொகுதியிலேயே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்; மந்தமாக நடந்து வரும் கெடிலம், பெண்ணையாற்று கரைகள் பலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; கடலுார் மாநகர சாலைகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்ற வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சண்முகம் நன்றி கூறினார்.

