/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடியிருப்போர் நலச்சங்கம் சமத்துவ பொங்கல் விழா
/
குடியிருப்போர் நலச்சங்கம் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2025 10:26 PM

கடலுார்; கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் நத்தப்பட்டு பொதிகை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நத்தப்பட்டில் நடந்த விழாவிற்கு, கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன், குடியிருப்போர் நலச்சங்க துணை தலைவர் செல்வம் தலைமை தாங்கினர். கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன், நிர்வாகிகள் தேவநாதன், வெங்கட்ரமணி, கலையரசி மனோகரன் முன்னிலை வகித்தனர்.
குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் வெங்கட்ரமணன் வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் விஷ்ணுபிரசாத் எம்.பி., சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதில், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
அப்போது, காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கோண்டூர் ஊராட்சி செயலாளர் வேலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.