ADDED : நவ 07, 2025 12:48 AM
கடலுார்: கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், கடலுார் வில்வ நகரிலுள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டமைப்பு தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். உதவி பொதுச்செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வெங்கடேசன், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், 'கடலுார் பஸ்நிலையத்தை, சட்டசபை தொகுதியில் அமைக்க வேண்டும்; மாநகரில் கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, நாய்கள் தொல்லை, பன்றி தொல்லை, கொசுத்தொல்லையை தடுக்க நடவடிக்கை வேண்டும்; கெடிலம் பெண்ணையாறு கரைகள் பலப்படுத்தும் பணியை துரிதமாக்க வேண்டும்.
கஸ்டம்ஸ் சாலை விரிவாகத்தின் போது ஆல்பேட்டை முதல் தாழங்குடா வரையிலும் மற்றும் நியூசினிமா முதல் மாற்று புறவழிச்சாலை வரையிலும் இலகுரக போக்குவரத்திற்கு ஆறுகளின் கரைகளில் சாலை அமைக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 25ம் தேதி கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
துணைத்தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

