sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாரம்பரிய கட்டடங்கள் மறுசீரமைப்பு பணி துவக்கம்

/

பாரம்பரிய கட்டடங்கள் மறுசீரமைப்பு பணி துவக்கம்

பாரம்பரிய கட்டடங்கள் மறுசீரமைப்பு பணி துவக்கம்

பாரம்பரிய கட்டடங்கள் மறுசீரமைப்பு பணி துவக்கம்


ADDED : நவ 07, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் மருத்துவ மற்றும் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடங்கள் மறு சீரமைக்கும் பணி துவங்கியது.

தேவனாம்பட்டினம் மருத்துவ மற்றும் துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடங்களை, 10.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணியினை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ., ஐயப்பன், முன்னிலை வகித்தனர்.

கடந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த துறைமுக அலுவலர் பராம்பரியக்கட்டடம் மற்றும் 117 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருத்துவ அலுவலர் பராம்பரிய கட்டடம் ஆகியவை சில்வர் பீச் அருகில் அமைந்துள்ளது.

மருத்துவ அலுவலர் கட்டடம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது.

இது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ' சுப்பராயலு பூங்கா சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கலெக்டர் அலுவலகம் அருகே 15 ஏக்கர் பரப்பளவில் புதியதாக பெரியளவில் பூங்கா அமைய விருக்கிறது,' என்றார்.

எஸ்.பி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், கோட்டாட்சியர் சுந்தரராஜன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us